ஐதராபாத் : ராமானுஜர் போன்ற துறவிகள், நாட்டை கலாசார ரீதியில் ஒன்று படுத்தினர், என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறினார்.
தெலுங்கானாவில் ஹைதராபாத் புறநகர் பகுதியில் திருத்தண்டி ஜீயர் ஆசிரமம் சார்பில், ராமானுஜரின் 1000வது பிறந்த ஆண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி ராமானுஜரின் 216 அடி உயர சிலையை பிரதமர் மோடி சமீபத்தில் திறந்து வைத்தார்.இந்நிலையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்றார். அவர் பேசியதாவது: இமயம் முதல் குமரி வரை இந்தியா ஒரே நாடாக இருப்பதற்கு நம் கலாசாரம் தான் காரணம். இந்தக் கலாசாரத்தை வலுப்படுத்தி, நாட்டை ஒன்று படுத்தியவர்கள் ராமானுஜர் போன்ற துறவிகள் தான். பக்தி இயக்கம், நாட்டை எப்படி ஒன்று படுத்தியது என்பதை புராணங்கள் கூறுகின்றன. ராமானுஜர் ஏற்படுத்திய பக்தி, தமிழகத்தின் ஸ்ரீரங்கத்திலிருந்து, உத்தர பிரதேசத்தின் வாரணாசி வரை பரவியது. இவ்வாறு ஜனாதிபதி பேசினார்.