Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு சித்தானந்த சுவாமி கோவிலில் பிரதோஷ வழிபாடு சித்தானந்த சுவாமி கோவிலில் பிரதோஷ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோவிலில் திருக்கல்யாணம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோவிலில் திருக்கல்யாணம்

பதிவு செய்த நாள்

15 பிப்
2022
11:02

திருவொற்றியூர் : திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோவில் மாசி பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான கல்யாண சுந்தரர் திருக்கல்யாணம், இன்று நடைபெற்றது.

சென்னை, திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி - வடிவுடையம்மன் கோவில், 2,000 ஆண்டுகள் பழமையானது. இங்கு ஆண்டுதோறும், மாசி மாதம் பத்து நாட்கள் பிரம்மோற்சவ திருவிழா நடைபெறுவது வழக்கம். இவ்வாண்டு மாசி பிரம்மோற்சவம், 7ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களில், உற்சவர் சந்திர சேகரர், சூரிய, சந்திர பிரபை, நாகம், சிம்மம், யானை, ரிஷபம், அதிகார நந்தி, அஸ்தமானகிரி, பூப்பல்லக்கு உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி மாடவீதி உலா வந்தார். முக்கிய நிகழ்வான சந்திர சேகரர் திருத்தேர் உற்சவம், நேற்று முன்தினம் நடைபெற்றது. உற்சவர் நேற்று காலை குதிரை வாகனத்திலும், மாலை இந்திர விமானத்திலும் எழுந்தருளி மாடவீதி கண்டார்.மாசி பிரம்மோற்சவத்தின் மற்றொரு நிகழ்வான கல்யாண சுந்தரர் திருக்கல்யாணம், இன்று காலை, 10:30 - 12:00 மணிக்குள், கோவில் வளாகத்தில் இருக்கும் வசந்த மண்டபத்தில் நடைபெற்றது. திருக்கல்யாண கோலத்தில் கல்யாணசுந்தரர்-திரிபுரசுந்தரி தாயார் அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர், நிறைவு நாளான, 17ம் தேதி, பின் இரவில் தியாகராஜ சுவாமி பந்தம் பறி உற்சவம், 18 திருநடனம் நிகழ்வுடன் மாசி பிரம்மோற்சவம் திருவிழா நிறைவுறும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சென்னை: ஸ்ரீ வியாசராஜ மடம் சார்பில், தஸமனோத்ஸவம் அதாவது பத்து ஆண்டுகளான பீடத்தை அலங்கரிக்கும் ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் புரட்டாசி குடை திருவிழாவை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
பழநி: பழநி வன்னி விநாயகர் கோயில் நிர்வாகம், தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பில் வன்னி விநாயகர் கோயிலில் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே பன்னீர்மடையில் உள்ள உலகளந்த பெருமாள் திருக்கோயில், கிருஷ்ணசாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar