வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் நடந்த மாசி மாத பிரதோஷ வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.இதனை முன்னிட்டு நேற்று அதிகாலை முதல் பக்தர்கள் தாணிப்பாறை மலை அடிவாரத்தில் குவிந்திருந்தனர். காலை 7:00 மணிக்கு உடல் வெப்ப பரிசோதனைக்கு பின்பு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர்.கோயிலில் மாலை 4:30 மணிக்குமேல் சுந்தர மகாலிங்கம், சுந்தரமூர்த்தி, சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு பிரதோஷ பூஜைகளை கோயில் அர்ச்சகர்கள் செய்தனர்.ஏற்பாடுகளை அறங்காவலர் ராஜா பெரியசாமி, செயல் அலுவலர் விஸ்வநாதன் செய்திருந்தனர்.