வெள்ளகோவில்: வெள்ளகோவில் வீரக்குமாரசுவாமி கோவிலில் 139 ம் ஆண்டு மாசி மஹா சிவன்ராத்திரி தேர்த்திருவிழாவினை முன்னிட்டு நேற்று காலை 10 மணியளவில் தேர் முகூர்த்தக்கால் போட்டு சிறப்பு பூஜை நடந்தது.
தேர் மேற் புறத்தில் நடப்படும் முதல் கம்பத்தை மஞ்சள் பூசி, கம்பம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, மாலையிட்டு, சிறப்பு பூஜை செய்து, கோவிலை வலம் வந்து கால் தேரின் மீது நிறுவப்பட்டது. முன்னதாக தேரில் கட்டப்பட்டிருந்த பணை ஓலையை கிழித்து தேர் அலங்கரிக்கும் பணி துவங்கப்பட்டது. இந்நிகழ்வில் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், நற்பணி மன்ற தலைவர் பாலசுப்பிரமணியன், முன்னாள் அறங்காவலர்கள் முத்துக்குமார், சேகர், ராமசாமி, உட்பட கோவில் குலத்தவர்கள், பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.