வடிவீஸ்வரம் அழகம்மன் கோயில் மாசி திருவிழா தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15பிப் 2022 04:02
நாகர்கோவில்: வடிவீஸ்வரம் அழகம்மன் சமேத சுந்தரேஸ்வரர் கோயிலில் மாசி திருவிழா தேரோட்டம் நடைபெற்றது.
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருக்கோயில்களில் ஒன்றான இக்கோயில் திருவிதாங்கூர் மன்னர் காலத்தில் கட்டப்பட்டது. ஊர் மக்கள் வேண்டுகோள் படி 2014–ம் ஆண்டு இக்கோயிலுக்கு தினமலர் சாபில் ராஜகோபுரம் கட்டி கொடுக்கப்பட்டது. இங்கு கடந்த ஏழாம் தேதி காலை கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. தினமும் காலையிலும், மாலையிலும் பல்வேறு வாகனங்களில் சுவாமி, அம்பாள் எழுந்திருளினர். ஒன்பதாம் திருவிழாவான இன்று காலை தேரோட்டம் நடைபெற்றது. சிறிய தேரில் கணபதியும், பெரிய தேரில் சுவாமி, அம்பாள் எழுந்தருளினர். ஏராளமான பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர். இரவு சுவாமி – அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளினர். தொடர்ந்து சப்தாவர்ணம் நடைபெற்றது. நாளை ஆராட்டுடன் விழா நிறைவு பெறுகிறது.