சென்னை: சென்னை கோவில்களில் மாசி மகம் விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில், இன்று சென்னையில் உள்ள பல்வேறு கோவில்களில் இருந்து உற்சவ மூர்த்திகள் மெரினா கடற்கரைக்கு எடுத்து வரப்பட்டு தீர்த்தவாரி நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.