கமுதி முத்துமாரி அம்மன் கோயிலில் முகூர்த்தகால் நடும் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16பிப் 2022 03:02
கமுதி: கமுதி முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு முகூர்த்தகால் நடும் விழா நடந்தது.அம்பலகாரர் சக்திவேல், மாசிமாத டிரஸ்டி சங்கர் ஆகியோர் தலைமை வகித்தனர். கோயிலில் வருகின்ற பங்குனி மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் கொடியேற்றப்பட்டு உத்திர நட்சத்திரத்தில் கொடி இறக்கப்படுவது வழக்கம். அதனடிப்படையில் கோயில் முன்பு முகூர்த்தகால் நடப்பட்டது.இந்நிலையில் இன்று முதல் பக்தர்கள் காப்புகட்டி விரதம் இருக்கத் தொடங்கினார். தினந்தோறும் அம்மனுக்கு சிறப்புபூஜை, அம்மன் நகர்வலம் நிகழ்ச்சி நடைபெறும். மார்ச் 22ம் தேதி பொங்கல் விழா, 23ம் தேதி அக்னி சட்டி,பால்குடம் சேத்தாண்டி வேஷம் அணிந்து நேர்த்திகடன், 25ம் தேதி 2008 திருவிளக்கு பூஜை, 26ம் தேதி முளைப்பாரியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.