பெத்தாம்பட்டி அய்யனார், கருப்பணசாமி கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஜன 2026 11:01
சாணார்பட்டி: சாணார்பட்டி அருகே பெத்தாம்பட்டி அய்யனார், கருப்பணசாமி, விநாயகர் கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக திருச்செந்தூர், ராமேஸ்வரம், திருமலைக்கேணி உள்ளிட்ட புனித ஸ்தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்த குடங்கள் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து கணபதி பூஜை, வாஸ்து சாந்தி, வேதபாராயணம், பூர்ணாகுதி, நாடி சந்தானம், கடம்புறப்பாடு உள்ளிட்ட யாகசால பூஜைகள் நடைபெற்றன.தொடர்ந்து கோயில் கலசங்களில் புனித நீர் ஊற்றி கருட தரிசனத்துடன் கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை மேட்டுக்கடை டாக்டர் திருவேங்கடஜோதி பட்டாச்சாரியார் நடத்தி வைத்தார்.இதில் பெத்தாம்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டன.