Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாசிமகம் : மணிமுத்தா ஆற்றில் குவிந்த ... மாசாணியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா மாசாணியம்மன் கோவிலில் குண்டம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாசி மகம்: மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
மாசி மகம்: மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் குவிந்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

17 பிப்
2022
01:02

மயிலாடுதுறை: மாசி மகத்தை முன்னிட்டு மயிலாடுதுறையில் உலக புகழ்பெற்ற காவிரி துலாக்கட்டத்தில் ஏராளமனோர் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு செய்தனர்.

மாசி மகத்தன்று கடற்கரை, ஆற்றங்கரை உள்ளிட்ட புண்ணிய தீர்த்தங்களில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிப்பது நன்மை பயக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. கடந்த ஆண்டு கொரோனா தொற்றின் தாக்கத்தால் மாசி மாத திருவிழா மற்றும் தர்ப்பணம் செய்து வழிபாடு நடத்த அரசு தடை விதித்து இருந்த நிலையில், தற்போது தடை நீக்கப் பட்டுள்ளது. இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை காவேரி துலாக்கட்டம் காசிக்கு இணையான இடமாகும். இங்கு காவிரியில் 12புண்ணிய தீர்த்தங்களும், காசியைப்போன்று விஸ்வநாதர், கேதாரநாத் ஆலயங்களும் கரையிலேயே அமைந்துள்ளது. இங்கு புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்கு தர்பணம் அளிப்பது சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். இந்த துலாகட்டத்தில் நீராடினால் தாங்கள் செய்த பாவங்கள் போக்கி விடும் என்பதும் ஐதீகம். இன்று மாசிமகத்தை முன்னிட்டு காவிரி துலா கட்டத்தில் ஏராளமானோர் தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்தும், புனித நீராடியும் வழிபாட்டில் ஈடுபட்டனர். இருப்பினும் காவிரியாற்றில் குறைந்த அளவு தண்ணீர் சென்றதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த, சித்திரை வசந்த உற்சவ பந்தக்கால் ... மேலும்
 
temple news
சேலம்: சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் ராஜகோபுர நுழைவு வாயிலில் உபயதாரரால், 19 லட்சத்தில் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய மூன்றாவது திதி அட்சய திருதியை ஆகும். ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar