ஆனைமலை: பொள்ளாச்சி அருகே ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழா நடந்தது. இதில், பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், குண்டம் திருவிழா பிப்., 1ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் மயான பூஜை, சக்தி கும்பஸ்தாபனம் வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி இன்று (17ம் தேதி) காலை, 9:30 மணிக்கு குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடந்தது. இதில், பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். வரும் 19ம் தேதி காலை, அம்மனுக்கு மகா அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை நடக்கிறது.