திருமங்கலம்: திருமங்கலம் அருகே உச்சபட்டியில் உள்ள சிவன் கோவில் மற்றும் ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவில்களில் கும்பாபிஷேகம் முடிந்து ஒரு வருடம் ஆன நிலையில் வருடாபிஷேகம் நடந்தது. அதிகாலை கணபதி ஹோமத்துடன் தொடங்கிய யாகசாலை பூஜைக்கு பின் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. பக்தர்கள் பால்குடம், முளைப்பாரி எடுத்து வந்தனர். யாகசாலை பூஜைகளை மணி அய்யர் மற்றும் குழுவினர் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பாலகிருஷ்ணன், உச்சப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பிச்சையம்மாள், ஈஸ்வரன், முன்னாள் தலைவர் கார்த்திகேயன் செய்திருந்தனர்.