பதிவு செய்த நாள்
20
பிப்
2022
07:02
தங்கவயல்:உரிகம்பேட்டை அருகே உள்ள பெத்தப்பள்ளி கிராமத்தின் கெங்கையம்மன் கோவில்பிரம்மோற்சவ திருவிழா, இம்மாதம் 22ம் தேதி கோலாகலமாக நடக்க உள்ளது.
கோலார் மாவட்ட புராதன கோவில்களில் ஒன்று, பெத்தப்பள்ளி கெங்கையம்மன் கோவில். இங்கு, ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா கொண்டாடப்படுகிறது. இத்திருவிழாவை முன்னிட்டு, அனைத்து
கல்வி நிலையங்களுக்கும், அரசு விடுமுறை விடுவர்.கொரோனா தொற்று ஏற்பட்டதால், இரண்டு ஆண்டுகளாக எளிய முறையில் தேர் திருவிழா நடந்தது. இவ்வாண்டும் எளிய முறையில் பிரம்மோற்சவம் நடத்தப்படுகிறது.அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு, இம்மாதம் 22ல் காலை சுவாமிக்கு அபிஷேகம், அர்ச்சனைகள், அலங்காரம், கும்பம் படைத்தல், மாவிளக்கு பூஜைகள்; மதியம் 12 மணிக்கு பிரம்மோற்சவம் நடக்கிறது.