திருப்பூர்; அலகுமலையில் முத்துக்குமார பால தண்டாயுதபாணி சுவாமி கோவில் உள்ளது. கோவிலின் ஐந்தாவது ஆண்டு கும்பாபிஷேக விழா இன்று நடந்தது. காலையில், மஞ்சள் விநாயகர் வழிபாடு; யாக சாலை பூஜைகள் நடைபெற்றன. மூலவருக்கு பூர்ணாகுதி மற்றும் மஹா அபிஷேகம் நடந்தது. இதில், 108 வலம்புரி சங்குகளால் அபிேஷகம் நடத்தப்பட்டது. மதியம், 12:00 மணிக்கு தங்கத் தேர் உலாவும், மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்து, மஹா தீபாராதனை நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று பால தண்டாயுதபாணி சுவாமியை வழிபட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.