பதிவு செய்த நாள்
21
பிப்
2022
05:02
வடமதுரை: பாடியூர் புதுப்பட்டி அருகே நாட்டாமைகாரன்பட்டி எல்லையில் அமைந்துள்ள வீருசக்தி விநாயகர், வீருதும்மம்மாள் மாலை கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில் அர்ச்சகர் குருவாயூரப்பர் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். வேடசந்தூர் எம்.எல்.ஏ., காந்திராஜன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் பழனிச்சாமி, பரமசிவம் பங்கேற்றனர். விழா ஏற்பாட்டினை பி.புதுப்பட்டி நாட்டாமைகாரன்பட்டி, எம்.குரும்பபட்டி, கோவு கவுண்டன்பட்டி, காக்காத்தோப்பூர், ஜல்லிபட்டி, நந்தவனப்பட்டி, வட்டப்பாறை, தாடிக்கொம்பு ஆத்துமரத்துபட்டி, நாகைய கவுண்டன்பட்டி கிராமங்களில் வசிக்கும் ஒக்கலிகர் தசரிவார் குல தலைகட்டுதாரர்கள் செய்திருந்தனர்.