திருவாடானை : ஓரியூர் சிவன் கோயில் கும்பாபிேஷகத்தை முன்னிட்டு புதிய விமானம் அமைக்கும் பணி நடந்தது.திருவாடானை அருகே ஓரியூரில் பழமைவாய்ந்த மட்டுவார்குழலி உடனாய சேயுமானவர் கோயில் உள்ளது. இக் கோயில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிேஷக பணிகள் நடந்து வருகிறது. நேற்று காலை கோயில் கருவறை மேல் புதிய விமானம் அமைத்தல் நடந்தது. முன்னதாக சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜை நடந்தது.பெங்களூரு காரைக்கால் அம்மையார், ஈரோடு அரன்பணி அறக்கட்டளை சிவ தொண்டர்களால் குருநாதர் ஒலியரசு தலைமையில் இந் நிகழ்ச்சி நடந்தது. கோவை குமாரலிங்கம்,ஈரோடு தியாகராஜன், பெங்களூர் மாதா அம்மையார் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தேவாரம், திருவாசகம் போன்ற பக்திபாடல்கள் பாடப்பட்டது.