தேவகோட்டை: ராமகிருஷ்ண வித்யாலயத்தில் ராமகிருஷ்ண ஜெயந்தி விழா சுவாமி நியமானந்த மஹராஜ் தலைமையில் நடந்தது. ராமகிருஷ்ண சங்கத்தலைவர் ஜமீன்தார் சோமநாராயணன் முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் சீனிவாசன் வரவேற்றார். காலையில் வேதபாராயணம், திருமுறை பாராயணத்தை தொடர்ந்து சிறப்பு ஆராதனைகள் நடந்தன. மாலையில் நடந்த விழாவில் மதுரை ஹரிதியாகராஜன் பேசினார், டாக்டர் அபிராமி பரிசுகள் வழங்கினார். மாணவர்களின் சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தன.