கேரளாவிலும் பலராமருக்கு என தனி கோயில் உள்ளது. திருச்சூர் மாவட்டத்தில் நந்திபுலம் என்ற தலத்தில் உள்ளது இக்கோயில் மரத்தால் ஆனது என்பது ஒரு வித்தியாசமான தகவல். ஆனால் கருவறையும் அதைச் சுற்றியுள்ள சுவரும் கருங்கல்லால் ஆனவை. இந்த சுவர்கள் சிதிலமடைந்து காட்சியளிக்கிறது. விமானம் கூம்பு வடிவில் உள்ளது. பலராமரின் பிறந்த நாள் ஆடி பவுர்ணமியன்று கொண்டாடப்படுகிறது. சில இடங்களில் அட்சய திருதியை அன்று கொண்டாடப்படுகிறது. குப்தகாசி என்பது உத்தர்கண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு பெருநகரம். இங்குள்ள ஜாக்தார் என்ற பகுதியில் ஒரு எளிய பலராமர் கோயில் உள்ளது. கோயிலைச் சுற்றிலும் கேதார் குன்றுகள் அழகாக காட்சியளிக்கின்றன. கண்ணனின் பேரனான அனிருத்தன் என்பவன் திருமணம் இங்கு நடந்ததாகவும் அதற்கு பலராமனும் கண்ணனும் வருகை தந்தனர் என்றும், அந்த இருவரும் தங்கள் அம்சம் பொருந்திய கோயில்களை இந்தப் பகுதியில் நிறுவியதாக சொல்கின்றனர்.