‘மன்னிப்பு’ எனும் வாக்கியத்துக்கு இருக்கும் வலிமை அலாதியானது. பிறரை மன்னித்தாலே போதும். பாதி பிரச்னைகள் குறைந்துவிடும். இதன்மூலம் பாறை போல் இருக்கும் மனம் மெல்லிய இறகைப்போல மாறிவிடும். ஒருவர் தொழுகைக்கு வரும் போது பள்ளிவாசல் அருகே சிறுநீர் கழித்தார். அதை பார்த்து கோபம் கொண்ட சிலர், அவரை அடிக்கச் சென்றனர். அப்போது அங்கு இருந்த நாயகம், ‘‘யாரும் கோபப்படாதீர்கள். அவர் தெரியாமல் தவறு செய்துவிட்டார். அவரை மன்னித்துவிடுங்கள்’’ என்றார். பார்த்தீர்களா.. ஒருவரை மன்னிப்பதன் மூலம் பிரச்னைகள் வராமல் தடுக்கலாம் அல்லவா. இனியாவது பிறர் செய்யும் தவறுகளை பெரிதுபடுத்தாமல் மன்னித்து விடலாமே!