முல்லா வியாபார விஷயமாக வெளியூர் சென்றபோது, விடுதி ஒன்றில் தங்கினார். அப்போது எளிமையான ஆடையை அவர் அணிந்திருந்ததால், அங்குள்ள பணியாளர்கள் யாரும் அவரை பொருட்படுத்தவில்லை. இருந்தாலும் அறைக்குள் சென்று படுத்த முல்லாவுக்கு தாகம் எடுக்கவே, தண்ணீர் உள்ளதா என தேடினார். அங்கு தண்ணீர் இல்லாததால் வெளியே வந்தவர், பணியாளர்கள் பேசுவதைக் கண்டார். அவர்களிடம் சென்று தண்ணீர் வேண்டுமெனக் கேட்டார். அவர்களோ முல்லா சொல்வதை காதில்கூட வாங்காமல் பேசிக்கொண்டே இருந்தனர். இதனால் கோபப்பட்டவர், ‘நெருப்பு.. நெருப்பு...’ என அலற ஆரம்பித்தார். பதறிய பணியாளர்கள், தண்ணீர் குடங்களை கொண்டு வந்தனர். முல்லாவிடம், ‘‘ஐயா.. எங்கே தீப்பற்றியது’’ எனகேட்டனர். அப்போது அவர் பதில் சொல்லாமல், குடத்தினுள் இருந்த தண்ணீரை குடித்தார். ‘‘அப்பாடா! தீ அணைந்து விட்டது’’ என செல்லியபடியே சிரித்தார். ‘‘நெருப்பு பற்றியதாகச் சொன்னீர்களே. எங்கே..’’ என பணியாளர்கள் கோபப்பட்டனர். ‘‘நெருப்பு என் வயிற்றுக்குள் தான் பற்றியது. இப்போது இது அணைந்து விட்டது’’ என சொன்னார். முல்லாவை அவமானப்படுத்தியதற்கு, தங்களுக்கு என நொந்தனர்.