அமெரிக்காவின் ஹிராம் கல்லுாரியின் முதல்வராக இருந்தார் ஜேம்ஸ் கார்ஃபீல்டு. இந்தக் கல்லுாரில் தன் மகனை சேர்க்க முதியவர் ஒருவர் வந்தார். வந்தவர் கல்லுாரியின் தலைவரை சந்தித்தார். ‘‘ஐயா. உங்கள் கல்லுாரில் படித்து முடிக்க பல வருடங்கள் ஆகிறது. இதனால் அவனது எதிர்காலம் பாதிக்கப்படுமே. இவன் வயதில் உள்ளவர்கள் எல்லாம் சீக்கிரம் ஒரு வேலையில் சேர்ந்துவிடுகிறார்கள். சீக்கிரம் படிப்பை முடிக்க வழி இருக்கா’’ எனக்கேட்டார் முதியவர். அதற்கு, ‘‘எத்தனை வருடம் படிக்கிறார் என்பதைவிட அறிவாளியாக எப்படி மாறுகிறார் என்பது முக்கியம். எதை நீங்கள் எளிதாகவும், விரைவாகவும் பெறுகிறீர்களோ.. அது விரைவில் உங்களைவிட்டு சென்றுவிடும்’’ என கல்லுாரியின் முதல்வர் சொன்னார். பார்த்தீர்களா... எந்தவொரு விஷயத்தையும் விரைவாக கற்றுக்கொள்வதைவிட, ஆழமாக கற்றுக்கொள்ளுங்கள்.