குரு சித்தானந்த சுவாமி கோவிலில் 1ம் தேதி மகா சிவராத்திரி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25பிப் 2022 06:02
புதுச்சேரி: கருவடிக்குப்பம் குரு சித்தானந்த சுவாமி கோவிலில், மகா சிவராத்திரி விழா, வரும் 1ம் தேதி நடக்கிறது.அதையொட்டி, 1ம் தேதி மாலை 6:00 மணி முதல் 7:00 மணி வரை முதல் கால பூஜை, இரவு 10:00 மணி முதல் 11:00 மணி வரை இரண்டாம் கால பூஜை நடக்கிறது.நள்ளிரவு 1:00 மணி முதல் 2:00 வரை மூன்றாம் கால பூஜை, மறுநாள் (2ம் தேதி) அதிகாலை 5:00 மணி முதல் 6:00 வரை நான்காம் கால பூஜை நடைபெறுகிறது.சிவராத்திரியை முன்னிட்டு, தேவஸ்தான கலையரங்கில், வரும் 26ம் தேதி முதல் அடுத்த மாதம் 3ம் தேதி வரை நாட்டியாஞ்சலி நடக்கிறது.மகா சிவராத்திரியன்று மாலை 6.௦௦ மணி முதல் மறுநாள் காலை 6.௦௦ மணி வரை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படுகிறது.சிவராத்திரி விழாவிற்கு அபிஷேகப் பொருட்கள் கொடுக்க விரும்பும் பக்தர்கள், 1ம் தேதி மாலை 4:00 மணிக்குள் தேவஸ்தானத்தில் வழங்கலாம் என தெரிவிக்கப்பட் டுள்ளது.ஏற்பாடுகளை, கோவில் அறங்காவலர் குழு தலைவர் இளங்கோவன், தேவசேனாதிபதி குருக்கள் செய்து வருகின்றனர்.