பதிவு செய்த நாள்
25
பிப்
2022
06:02
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அடுத்த திருப்புட்குழி விஜயராகவ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம், இன்று காலை, 4:40 - 5:45 மணிக்குள் கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
காஞ்சிபுரம் அடுத்த திருப்புட்குழியில் அமைந்துள்ள விஜயராகவ பெருமாள் கோவில், 108 திவ்ய தேசங்களில் ஒன்று.இந்த கோவிலில், ஒவ்வொரு அமாவாசை அன்று, பல இடங்களில் இருந்து திருமணமான, பெண்கள் குழந்தை வரம் வேண்டி சுவாமி தரிசனம் செய்வர். ஆண்டுதோறும் பிரம்மோற்சவமும் சிறப்பாக நடைபெறும்.இந்த ஆண்டு பிரம்மோற்சவம், இன்று காலை, 4:30 - 5:45 மணிக்குள் கொடியேற்றத்துடன் துவங்குகிறது.முதல் நாள் ஸ்ரீதேவி, பூதேவியருடன் பெருமாள், பவழக்கால் சப்பரம் வாகனத்தில் எழுந்தருளி, வீதியுலா செல்கிறார். இரவு, சிம்ம வாகனத்தில் வீதியுலா நடக்கிறது. மூன்றாம் நாள், கருட சேவை உற்சவம் நடைபெறும். அன்று, பாலுசெட்டிசத்திரத்தில் பிரதான பகுதிகளுக்கு கருட வாகனத்தில் பெருமாள் சென்று அருள்பாலிப்பார். வரும் 3ல், தேர் திருவிழா நடக்கிறது. 6ம் தேதியுடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.