ரூ.35 கோடியில் மீனாட்சி அம்மன் கோயில் பக்தர்கள் தங்கும் விடுதி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25பிப் 2022 06:02
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்குவதற்காக கோயில் நிதி ரூ.35 கோடியில் இருந்து விடுதி கட்ட அறநிலையத்துறை ஒப்புதல் அளித்துள்ளது.
இக்கோயிலுக்கு தினமும் நுாற்றுக்கணக்கான வெளியூர் பக்தர்கள் வருகின்றனர். இவர்கள் தங்கிச்செல்ல மேலச்சித்திரை வீதியில் கோயில் நிர்வாகம் சார்பில் பிர்லா விடுதி உள்ளது. ஆனால் இங்கு போதிய அறைகள் இல்லாததால் பக்தர்கள் கோயில் பகுதி விடுதிகளில் தங்குகின்றனர். இவர்களின் வசதிக்காக எல்லீஸ்நகரில் தரைதளம் மற்றும் 4 தளங்களுடன்கூடிய தங்கும் விடுதி கட்டப்படும் என சட்டசபையில் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். இதற்கான திட்ட மதிப்பீடு ரூ.35 கோடி என இறுதி செய்யப்பட்டது. மீனாட்சி கோயில் நிதியில் இருந்து இத்தொகையை செலவழிக்க அறநிலையத்துறை ஒப்புதல் அளித்துள்ளது. விரைவில் டெண்டர் விடப்பட்டு, பணிகள் துவங்கப்பட உள்ளன.