பதிவு செய்த நாள்
26
பிப்
2022
03:02
மேட்டுப்பாளையம்: சிறுமுகையில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில், கும்பாபிஷேக பணிகள் நடைபெறுவதை அடுத்து, பாலாலயம் அமைக்கப்பட்டது.
சிறுமுகை பழத்தோட்டத்தில் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலில், கற்பக விநாயகர், சிவபெருமான், நவகிரகங்கள் ஆகிய சன்னதிகள் உள்ளன. இக்கோவிலில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதற்காக கோவிலில் பாலாலயம் அமைக்கப்பட்டது. கவுமார மடாலயம் சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமி பங்கேற்று, பாலாலய பூஜை செய்தார். ஜெயப்பிரகாசம் தலைமையில், சிவனடியார்கள் யாக வேள்வி பூஜைகளை செய்தனர். பின்பு கோவில் கும்பாபிஷேக தேதியை குறிக்கும் வகையில், முக்கிய பிரமுகர்கள், கோவில் நிர்வாகிகள் ஆகியோர் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், 7 ஊர் பெரியவர்கள், பக்தர்கள் பங்கேற்றனர்.