Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆஸ்தானம் அடைந்தார் காரமடை ... விஜயவாடாவில் இருந்து காளஹஸ்தீஸ்வரருக்கு பட்டு  வஸ்திரம், சீர்வரிசை விஜயவாடாவில் இருந்து ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில் சிலைகளுக்காக டிஜிட்டல் அருங்காட்சியகம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கோவில் சிலைகளுக்காக டிஜிட்டல் அருங்காட்சியகம்!

பதிவு செய்த நாள்

28 பிப்
2022
11:02

சென்னை : தமிழக கோவில் சிலைகளை, ஆன்லைன் வாயிலாக, முப்பரிமாண வடிவில் பார்க்க, சென்னை ஐ.ஐ.டி.,யுடன் இணைந்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், டிஜிட்டல் அருங்காட்சியகத்தை உருவாக்கி உள்ளனர்.சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், கோவில்களில் திருடுபோன மற்றும்வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சிலைகளை மீட்டு வருகின்றனர்.

அந்த வகையில், பஞ்சலோக சுவாமி சிலைகள் 36; கற்சிலைகள் 265; மரச்சிலைகள் 73 என, 374 சிலைகளை மீட்டுள்ளனர்.வழக்கு விசாரணை நடப்பதால், நீதிமன்ற சொத்தாக இந்த சிலைகள், தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவிடமே ஒப்படைக்கப்பட்டு உள்ளது. போலீசார் இந்த சிலைகளை, சென்னை திருவொற்றியூர், எழும்பூர்அருங்காட்சியகம் உள்ளிட்ட இடங்களில் பாதுகாத்து வருகின்றனர். இந்த சிலைகளை, பொது மக்கள் ஆன்லைன் வாயிலாக, முப்பரிமாண வடிவில் பார்க்கும் வகையில், சென்னை, ஐ.ஐ.டி.,யுடன் இணைந்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், டிஜிட்டல்அருங்காட்சியத்தை உருவாக்கியுள்ளனர்.பொதுமக்கள், www.tnidols.com என்ற இணையதளம் வாயிலாக பார்க்கலாம். இதுகுறித்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி., ஜெயந்த் முரளி கூறியதாவது:நம் நாட்டின் பொக்கிஷமான சிலைகளை பாதுகாக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறோம். பழங்கால சிலைகள் குறித்து ஆய்வு செய்ய, புதிய மென்பொருள் ஒன்றையும் உருவாக்கி வருகிறோம். சிலைகள் மற்றும் கலை பொருட்கள் தொடர்பாக, பொதுமக்கள் எங்களை அணுகலாம். கோவில்களில் உள்ள அனைத்து சிலைகளையும் டிஜிட்டல் மயமாக்கி, ஆவணப்படுத்தும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூர் சத்திய ஞான சபையில் இன்று நடந்த மாதந்திர ஜோதி தரிசனத்தை காண பக்தர்கள் ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தாற்றில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் 12 ஆயிரம் பொற்காசுகள் இடும் ஐதீக ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வேள்வி மண்டபத்தில் ருத்ர ஹோமம் நடந்ததுருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar