திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் போர்வை களைதல் நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28பிப் 2022 10:02
சென்னை: திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவத்தின் ஒன்பதாம் நாளான இன்று (28 ம் தேதி) காலை தேரடி வீதியில் போர்வை களைதல் நடைபெற்றது. போர்வை களைதற்கு பின் சாற்றுப்படி இல்லாமல் அருமையான சேவையும், பின்னர் சாற்றுப்படி ஆகி மாலைகள் சாற்றப்பட்ட பின்பும் மிக அற்புமாக பத்தர்களுக்கு சேவை சாதித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.