பதிவு செய்த நாள்
01
மார்
2022
10:03
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மார்ச் 8ல் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
மார்ச் 7ல் கோயில் கம்பத்தடி மண்டபத்தில் அனுகபக்ஞை விநாயகர் முன்பு அனுக்ஞை, வாஸ்து சாந்தி பூஜைகள் நடக்கிறது. மார்ச் 8 காலை 10:30க்குமேல் 11:00 மணிக்குள் ரிஷப லக்னத்தில் கொடியேற்றம் நடக்கிறது. திருவிழா நாட்களில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை தினமும் காலையில் தங்கப்பல்லக்கிலம், மாலையில் தங்கமயில், தங்கக்குதிரை, வெள்ளி பூதம், அன்னம், ஷேசம், வெள்ளி ஆட்டுக்கிடாய், பச்சைக் குதிரை வாகனங்களில் தினம் ஒன்றில் எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சி நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக மார்ச் 14 இரவு வெள்ளி யானை வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை எழுந்தருளி கை பாரம் நிகழ்ச்சியும், மார்ச் 15 சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை, மார்ச் 18 பங்குனிஉத்திரம், மார்ச் 19 சூரசம்ஹாரம் லீலை, மார்ச் 20 பட்டாபிஷேகம், மார்ச் 21 திருக்கல்யாணம், மார்ச் 22 தேரோட்டம், மார்ச் 23 தீர்த்த உற்சவம் நடக்கிறது.