ராமேஸ்வரத்தில் மகா சிவராத்திரி விழா: மணலில் லிங்கம் அமைத்து பக்தர்கள் பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01மார் 2022 04:03
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் மகா சிவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. அக்னி தீர்த்த கடற்கரையில் பக்தர்கள் மணலில் சிவலிங்கம் வடிவமைத்து பூஜை செய்தனர். சிவராத்திரி விழாவிற்கு ஏராளமான பக்தர்கள் கோயிலில் குவிந்து வருகின்றனர்.
மாசி தேரோட்டம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் முக்கிய விழாவான மாசி சிவராத்திரி விழாவிற்கு கோயில் வளாகத்தில் பிப்.21ல் கொடி ஏற்றத்துடன் துவங்கியது. 9ம் நாள் விழாவான இன்று மாசி சிவராத்திரி தேரோட்டம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட மாசி திருத்தேரில் காலை 8:30 மணிக்கு சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் எழுந்தருளினர். பின் மகாதீபாராதனை நடந்தும், கோயில் இணை ஆணையர் பழனிக்குமார், தக்கார் குமரன் சேதுபதி, மேலாளர் சீனிவாசன், உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், பேஸ்கார்கள் கமலநாதன், அண்ணாதுரை, ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். பின் பக்தர்கள் சிவசிவ என கோஷமிட்டபடி தேரின் வடத்தை கோயில் ரதவீதியில் இழுத்து வந்து மாசி தேரோட்டம் விமரிசையாக நடந்தது.