பெரியகுளம்: பெரியகுளம் சச்சுமடை பாண்டி முனீஸ்வரர் கோவிலில் குலதெய்வ வழிபாடு கோலாகலமாக நடந்தது. தென் மாவட்டங்களில் பல்வேறு பகுதியிலிருந்து பக்தர்கள் குலதெய்வ வழிபாடு நடத்தினர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. வீச்சு கருப்பண்ணசாமி, டி.கள்ளிப்பட்டி முத்தையா சாமி, பெரியகுளம் காமாட்சியம்மன்,மாரியம்மன், காளியம்மன் கோயில்களில் குலதெய்வ வழிபாடு நடந்தது ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.