தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தில் ராமகிருஷ்ணர் ஜெயந்தி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02மார் 2022 04:03
தஞ்சாவூர் : தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தில் பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் ஜெயந்தி விழா வரும் 4ம் தேதி நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு விடியற்காலை 5.00 மணிக்கு மங்கள ஆரதி, 6.30 மணிக்கு ஸ்ரீ ராமகிருஷ்ண கோயிலை வலம் வரும் நாம சங்கீர்த்தனம், காலை 7.30 மணி முதல் விசேஷ பூஜை, 9.30 10.30 மணிக்கு ராமகிருஷ்ண அக்னி வளர்த்து ேஹாமம், 11.30 மணக்கு சிறப்பு தீபாரதனை, 12.00 மணிக்கு பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவில் பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் சுவாமிகளின் அருளுரை நடைபெறுகிறது. பக்தர்கள் அனைவரும் பங்கேற்று சுவாமியின் அருள்பெற வேண்டும் என தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி விமூர்த்தானந்தர் தெரிவித்துள்ளார்.