கோபால்பட்டி: கோபால்பட்டி அருகே ஆதி பரஞ்ஜோதி சகலோக மடத்தில் அமாவாசை சிறப்பு யாக பூஜை நடந்தது.
இந்த பூஜையில் சுற்று வட்டாரத்திலுள்ள மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த யாக பூஜையில் பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக கொண்டுவந்த மிளகாய்களை மூட்டை மூட்டையாக கொட்டி உலக நன்மை வேண்டி பூஜை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆதி பரஞ்சோதிக்கு மடத்தில் உள்ள கோவர்த்தன கோசாலையில் காங்கேயம், காராம் பசு, கிர், குட்டை, நாட்டு மாடு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட மாடுகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்கு அம்மாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களில் கோ பூஜை நடைபெறும். அதனைத் தொடர்ந்து மாடுகளுக்கு உணவுகள் வழங்கி பக்தர்கள் கோ பூஜையில் செய்தனர். இந்த பூஜைகளை ஸ்ரீ திருவேங்கட ஜோதி பட்டாச்சாரியார் செய்துவைத்தார். தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.