பதிவு செய்த நாள்
03
மார்
2022
04:03
தொண்டாமுத்தூர்: கோவை, ஈஷாவில் மகா சிவராத்திரியையொட்டி, யக்ஷா கலை திருவிழா துவங்கியது.
கோவை, ஈஷா யோக மையத்தில், மகா சிவராத்திரி விழாவையொட்டி, ஆண்டுதோறும் யக்ஷா கலை திருவிழா நடக்கும். இந்தாண்டு, யக்ஷா கலை திருவிழா, நேற்று துவங்கியது. யக்ஷா கலை திருவிழா, மூன்று நாட்கள், தினமும் இரவு 7:00 மணிக்கு, ஆதியோகி முன் நடைபெறுகிறது. முதல்நாள் நிகழ்ச்சியில், கர்நாடக இசை கலைஞர் அபிஷேக் ரகுமானின் இசை, பாஸ்கரின் வயலின், அனந்த கிருஷ்ணனின் மிருதங்கம் இசை நிகழ்ச்சி நடந்தது. என்று குமரேஷ் மற்றும் விதுஷி ஜெயந்தியின் வயலின் நிகழ்ச்சியும், நாளை புன்யா டான்ஸ் கம்பெனியின் பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. வரும், 5 முதல் 8ம் தேதி வரை நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெற உள்ளது.