அன்னூர்: நீலிபாளையம் மதுரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. நீலிபாளையத்தில் மிகவும் பழமையான மதுர காளியம்மன் கோவில் உள்ளது.இக்கோவிலில் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டன. கும்பாபிஷேக விழா கடந்த 2ம் தேதி மாலை முதற்கால யாக பூஜையுடன் துவங்கியது. நேற்று முன்தினம் காலை இரண்டாம் கால பூஜையும், மாலையில் மூன்றாம் கால பூஜையும் நடந்தது.நேற்று அதிகாலையில் நான்காம் கால யாக பூஜை நடந்தது.இதைத் தொடர்ந்து யாகசாலையில் இருந்து புனித நீர் அடங்கிய குடங்கள் கோபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து அலங்கார, அபிஷேக, தீபாராதனை நடந்தது. சிம்மக்குரல் நாட்டுப்புற இசை நிகழ்ச்சி நடந்தது.