கனகதுர்க்கை கோயில் சார்பாக காளஹஸ்தீஸ்வரருக்கு பட்டு வஸ்திரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05மார் 2022 11:03
சித்தூர்: காளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவம் கடந்த 24-2.2022 ஆம் தேதி அன்று பத்த கண்ணப்பர் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து முக்கிய நிகழ்வுகளாக 1.3 .2022 அன்று மகா சிவராத்திரி ,அதனைத் தொடர்ந்து தேர் திருவிழா , சாமி அம்மையார்களின் திருக்கல்யாண உற்சவத்தை தொடர்ந்து தினந்தோறும் பல்வேறு வாகனங்களில் சாமி அம்மையார்களின் ஊர்வலத்துடன் வெகு விமர்சையாக நடைபெற்று வந்தது.
காளஹஸ்தீஸ்வரருக்கும் ஞானப்பிரசுனாம்பிக்கை தாயாருக்கும் அரசு சார்பில் மற்றும் விஜயவாடா கனகதுர்க்கை அம்மன் கோயில் சார்பில் மற்றும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் உட்பட நேற்று காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவில் சார்பில் கோயில் நிர்வாக அதிகாரி வெங்கடேஸ்வர்லு மற்றும் கோயில் அறங்காவலர் குழு தலைவர் அகரம். மோகன் ரெட்டி ஆகியோர் பட்டு வஸ்திரங்களை (சீர்வரிசை பொருட்களை) ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு வழங்க வந்தவர்களை ஸ்ரீகாளஹஸ்தி தொகுதி எம்எல்ஏ மதுசூதன் ரெட்டி அறங்காவலர் குழுத்தலைவர் அஞ்சூரு.தாரக.சீனிவாசுலு மற்றும் கோயில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு ஆகியோர் சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்தனர்.தொடர்ந்து பட்டு வஸ்திரங்களை தலைமீது சுமந்து ஊர்வலமாக கொண்டு வந்து கோயில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் வேத பண்டிதர்களிடம் வழங்கியதோடு காளஹஸ்தீஸ்வரரையும் ஞானபிரசுனாம்பிகை தாயாரையும் சாமி தரிசனம் செய்தவர்களுக்கு கோயில் வளாகத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி சன்னதி அருகில் கோயில் சார்பில் வேத பண்டிதர்களால் ஆசீர்வாதம் செய்யப்பட்டதோடு சாமி படத்தையும் தீர்த்தப் பிரசாதங்களையும் வழங்கினர்.