பதிவு செய்த நாள்
09
மார்
2022
05:03
சோமனூர்: ராமாச்சியம்பாளையம் மாகாளியம்மன் கோவில் திருக்கல்யாண உற்சவம் மற்றும் பொங்கல் விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
சோமனூர் அடுத்த ராமாச்சியம்பாளையம் மாகாளியம்மன் கோவில் பழமையானது. கடந்த, பிப்., 22 ம்தேதி பூச்சாட்டுதலுடன் திருவிழா பூஜைகள் துவங்கின. மார்ச் 1 ம்தேதி கம்பம் நடப்பட்டது. தினமும் பக்தர்கள் பரவசத்துடன் கம்பம் சுற்றி ஆடினர்.பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் மற்றும் பல்வேறு திரவியங்களால், தினமும் அம்மனுக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் பூவோடு எடுத்து ஆடினர். கடந்த, 7 ம்தேதி விநாயகர், கருப்பராயன் பொங்கல் வைக்கப்பட்டு வழிபாடு நடந்தது. நேற்று முன்தினம் அதிகாலை அம்மை அழைத்தல், அம்மனுக்கு திருக் கல்யாண உற்சவம் நடந்தது. அதைத்தொடர்ந்து ஏராளமான பெண்கள், மாவிளக்கு எடுத்து வந்து, பொங்கல் வைத்து தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தினர். ஏராளமான ஆடுகள் பலி கொடுக்கப்பட்டன. திருவிழாவில், பல மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் பங்கேற்றனர்.