பதிவு செய்த நாள்
09
மார்
2022
05:03
மேட்டுப்பாளையம்: குண்டத்து காளியாதேவி கோவிலில், குண்டம் திருவிழா துவங்கியது.
மேட்டுப்பாளையம் அடுத்த, ஓடந்துறை ஊராட்சி ஊமப்பாளையம் காளியாதேவிபுரத்தில், கொண்டத்து காளியா தேவி கோவில் உள்ளது. இக்கோவிலின், 34ம் ஆண்டு குண்டம் திருவிழா கடந்த 1ம் தேதி பூ சாட்டுடன் துவங்கியது. 8 ம் தேதி இரவு ஆடு குண்டம் திறக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, 14 ம் தேதி இரவு அம்மன் அழைப்பும், 15 ல் ஊமப்பாளையம் விநாயகர் கோவிலில் இருந்து, சக்தி கரகங்களும், அக்னிசட்டி அழைப்பும், இரவு குண்டம் திறக்கப்பட உள்ளது.
அதன்பின்பு ஓடந்துறை பவானி அம்மன் கோவிலில் இருந்து, தேர் அளவு குத்தி அழைத்து வருகின்றனர். 16ம் தேதி அதிகாலை, 5:00 மணிக்கு பவானி ஆற்றின் இருந்து அம்மன் அழைப்பும், அதை தொடர்ந்து குண்டம் இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. பின்பு அம்மனுக்கும், மகா முனீஸ்வரருக்கும் அபிஷேக அலங்கார பூஜை நடைபெறுகிறது. அதை தொடர்ந்து மஞ்சள் நீராட்டும், பொங்கல், மாவிளக்கு பூஜையும், அன்னதானம் ஆகியவை நடைபெற உள்ளது. திருவிழா ஏற்பாடுகளை பூசாரிகள் காளியம்மாள், பழனிசாமி மற்றும் விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.