கொட்டாம்பட்டி: பதினெட்டு சுக்காம்பட்டியில் ஊருக்கு ஓதுக்குப்புறமான இடத்தில் 80 கிலோ எடை கொண்ட 2 அடி உயரமுள்ள கல்லால் ஆன அம்மன் சிலை இருப்பதாக வருவாய் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் நேற்று ஆர்.ஐ., கண்ணன் தலைமையில் வருவாய் துறையினர் மீட்டு அதே ஊரி்ல் உள்ள வி.ஏ.ஒ., அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.