பதிவு செய்த நாள்
09
மார்
2022
06:03
சித்தூர் : காளஹஸ்தி சிவன் கோயிலில் உற்சவ சாந்தி அபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
காளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த மாதம் 24.2. 2022 முதல் நேற்று 8.2 2022 வரை வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இறுதி நாளான நேற்று செவ்வாய்க்கிழமை இரவு ஞான பிரசுனாம்பிகா தாயார் மூலவர் சன்னதி எதிரில் உள்ள சயன மந்திரத்தில் ஏகாந்த சேவையுடன் மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் நிறைவு நாள் உற்சவம் நடந்தேறியது. இந்நிலையில் கடந்த பதிமூன்று நாட்கள் நடைபெற்ற மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழாவில் கோயில் வேத பண்டிதர்கள், அர்ச்சகர்கள் உட்பட கோயில் அதிகாரிகள் , ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் அறிந்தும் அறியாமலும் செய்த பிழைகளை மன்னித்து சாந்தம் அடைய செய்யும் நோக்கத்தோடு ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் உற்சவ மூர்த்திகளான ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் ,ஞானப்பிரசுனாம்பிகை தாயார் ஸ்ரீ -சிலந்தி, காள- பாம்பு ,ஹஸ்தி யானை மற்றும் பரத்வாஜ் முனிவரின் உற்சவ மூர்த்திகளுக்கு சாந்தி அபிஷேகங்களை முறைப்படி கோயில் அர்ச்சகர்களால் செய்யப்பட்டது. பால் ,தயிர் ,சந்தனம், மஞ்சள், குங்குமம் , விபூதி ,இளநீர் போன்ற வாசனை திரவியங்களால் அலங்கார மண்டபத்தில் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தியதோடு முன்னதாக அலங்கார மண்டபம் அருகில் சிறப்பு கலசம் ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்தனர் .அதனைத் தொடர்ந்து யாகம் வளர்த்து ஆகம முறைப்படி சாந்தி அபிஷேக ஆராதனைகள் நடந்தது .இந்நிகழ்ச்சியில் கோயில் நிர்வாக அதிகாரி நெத்தி.ராஜு தம்பதியினர் கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு.தாரக.சீனிவாசுலு மற்றும் கோயில் வேத பண்டிதர்கள் அர்ச்சகர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.