குன்றத்து சுவாமிகளுக்கு போலி பட்டு சாத்துப்படி செய்ய தடை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10மார் 2022 12:03
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோயில் பங்குனி திருவிழாவில் சுவாமிகளுக்கு போலி பட்டு சாத்துப்படி செய்ய நிர்வாகம் தடை விதித்துள்ளது. கோயிலில் மார்ச் 8ல் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று முதல் மார்ச் 23 வரை தினமும் ஒரு மண்டகப்படிகளில் சுவாமி எழுந்தருள்வார்.
அங்கு சுவாமிக்கு பட்டு, பரிவட்டங்கள் வழங்கப்படும். இந்த ஆண்டு மண்டகப்படிதாரர்கள், திருக்கண் வைப்பவர்கள், பக்தர்கள் சுவாமி, அம்மனுக்கு போலி பட்டு, கோரா பரிவட்டங்களுக்கு அனுமதிக்கப்படமாட்டாது. நயமான பட்டு, பரிவட்டங்களை வாங்கி ஒருநாள் முன்னதாகவே கோயில் உள்துறை பொறுப்பாளர்களிடம் காண்பித்து கட்டண ரசீது பெற்றுக் கொண்டதற்கு பின்பு தான் மண்டபத்தில் சுவாமி எழுந்தருளச் செய்யப்படும். தவிர திருக்கண் மண்டபங்களில் மாலை, பரிவட்டம் சாத்துபடி செய்வதற்கு ஏற்பட்ட பதிவு சுதந்திரம், புணுகு காப்பு, எண்ணெய் வகைகளை முன்னதாகவே உள் துறை அலுவலகத்தில் கொடுத்து ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.