பதிவு செய்த நாள்
10
மார்
2022
12:03
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது.
இதனை முன்னிட்டு இன்று காலை 9:00 மணிக்கு கொடிப்பட்டம் மாட வீதிகள், ரதவீதிகளில் சுற்றி கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. கொடிமரம் முன்பு சிறப்பு பூஜைகள் செய்து ரகுராம பட்டர் கொடியேற்றினார். பின்னர் ஆண்டாள், ரங்கமன்னாருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. விழாவில் சடகோப ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள், தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் முத்துராஜா, முத்து பட்டர், அரையர் முகுந்தன், வேதபிரான் சுதர்சன், கோவில் பட்டர்கள் கிரி, பாலாஜி, ஸ்தானிகம் ரமேஷ், வெங்கடேசன், மணியம் கோபி மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். திருவிழா துவங்கியதை முன்னிட்டு தினமும் காலை 9:00 மணிக்கு ஆண்டாள், ரங்கமன்னார் மண்டபம் எழுந்தருள்கின்றனர். மார்ச் 18 அன்று காலை 7:00 மணிக்கு செப்புதேரோட்டமும், இரவு 7:00 மணிக்கு ஆண்டாள், ரங்கமன்னார் திருக்கல்யாண வைபவமும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது.