திருக்காமீஸ்வரர் கோவிலில் தேரோட்டம் நடத்த கோரி மனு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10மார் 2022 03:03
புதுச்சேரி: வில்லியனுார் திருக்காமீஸ்வரர் கோவிலில் இந்தாண்டு தேரோட்டம் நடைபெறும் என முதல்வர் உறுதி அளித்துள்ளதாக, எதிர்க்கட்சி தலைவர் சிவா கூறினார்.வில்லியனுார் திருக்காமீஸ்வரர் கோவிலில், வைகாசி மாத பிரம்மோற்சவத்தில் தேரோட்டம் நடைபெறும். கொரோனா பரவலால் கடந்த இரு ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறவில்லை. இந்நிலையில், எதிர்கட்சி தலைவர் சிவா மற்றும் கோவில் நிர்வாகிகள் நேற்று சட்டசபையில் முதல்வரை சந்தித்து மனு கொடுத்தனர். மனுவில், திருக்காமீஸ்வரர் கோவிலுக்கு புதிய தேர் செய்யும் பணியை இந்தாண்டே துவங்க வேண்டும். கொரோனா தொற்று குறைந்துள்ளதால் தற்போதுள்ள தேரின் உறுதித்தன்மையை ஆய்வு செய்த குழு பரிந்துரையின் பேரில், இந்த ஆண்டு தேர்விழா நடத்த வேண்டும். தேர் திருவிழா நடத்த உத்தரவு வழங்க வேண்டும். வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.பின்னர் சிவா கூறுகையில், மனுவை பெற்றுக் கொண்ட முதல்வர், தேரின் உறுதித்தன்மையை ஆய்வு செய்து, இந்த ஆண்டு தேரோட்டம் நடத்தப்படும் என உறுதியளித்தார் என்றார்.