பதிவு செய்த நாள்
10
மார்
2022
01:03
ரெட்டியார்சத்திரம்: கொத்தப்புள்ளி கதிர் நரசிங்க பெருமாள் கோயில் கும்பாபிஷேக பணிகள், பாலாலயத்துடன் துவங்கின.
திண்டுக்கல்-பழனி ரோட்டில், ரெட்டியார்சத்திரம் அருகே பிரசித்தி பெற்ற கதிர் நரசிங்க பெருமாள் கோயில் உள்ளது. ஒரே கருவறையில் ஹரியும் சிவனும் அருள்பாலிக்கும் கோவிலாக(ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாள், சுயம்பு லிங்க சிவன்) அமைந்துள்ளது. செங்கமல வள்ளித்தாயார், வீரஆஞ்சநேயர், சக்கரத்தாழ்வார், அனுக்ரக பைரவர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு தனித்தனியே கோயில்கள் இங்கு உள்ளன. அறநிலையத்துறை வசமுள்ள இக்கோயிலில், 2004ல் கும்பாபிஷேகம் நடந்தது. சுற்றுச்சுவர் பாசி படர்ந்து, விமானம், சுவர்ப்பகுதி தூர்ந்திருந்தது. இக்கோயில் கும்பாபிஷேக பணிகள், விமான பாலாலய பூஜையுடன் துவங்கியுள்ளது. கோயில் சுற்றுச்சுவரில் பம்பிங் முறையில் பாசி அகற்றும் பணி மும்முரமாக நடக்கிறது. சொர்க்கவாசல் கோபுர சீரமைப்பு, ஓரிரு நாட்களில் துவங்க உள்ளது. வண்ணக்கல் பதித்தல், வெளிப்பிரகாரத்தில் பேவர் பிளாக் அமைக்கப்பட உள்ளது. விரைவில் பணிகளை முடித்து, கும்பாபிஷேக நாள் நிர்ணயிக்கப்படும் என, ஊழியர்கள் தெரிவித்தனர்.