அரியாங்குப்பம்: பூரணாங்குப்பம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயானக் கொள்ளை விழாவையொட்டி தேரோட்டம் நடந்தது.தவளக்குப்பம் அடுத்த பூரணாங்குப்பம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் பிரமோற்சவம் கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று 9ம் நாள் மயானக் கொள்ளை விழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது. சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம் தேர் வடம் பிடித்து இழுத்து, சுவாமி தரிசனம் செய்தனர். திரளான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.