பரமக்குடி முத்தாலம்மன் கோயில் பங்குனி விழா துவங்கியது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11மார் 2022 03:03
பரமக்குடி: பரமக்குடி முத்தாலம்மன் கோயில் பங்குனி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
இக்கோவிலில் நேற்று இரவு 10:00 மணிக்கு காப்பு கட்டு நடந்தது. தொடர்ந்து இன்று காலை 8:15 மணிக்கு கோயில் கொடிமரத்தில் சிங்கக் கொடி ஏற்றப்பட்டது. பின்னர் அபிஷேக ஆராதனைகள் நடந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அம்மன் பூதகி வாகனத்தில் வீதி வலம் வந்தார். அப்போது ஆயிரவைசிய பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் மாதர் சங்கத்தினரின் கோலாட்ட நிகழ்ச்சிகள் என நடந்தது. மார்ச் 14 அன்று வண்டி மாகாளி உற்சவமும், மார்ச் 18 அன்று குதிரை வாகன சேவை நடக்க உள்ளது. மார்ச் 19 அக்னிச்சட்டி ஊர்வலம், இரவு மின்சார தீப அலங்காரத்தில் அம்மன் நான்கு மாட வீதியில் வலம் வருவார். மேலும் மார்ச் 21 அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க உள்ள பால் குடமும் நடக்கிறது. இதனையொட்டி கோயில் வளாகம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. ஏற்பாடுகளை தேவஸ்தான பரம்பரை டிரஸ்டிகள் மற்றும் ஆயிரவைசிய சபையினர் செய்துள்ளனர்.