காவரியாற்றின் தென்கரையில், கும்பகோணம்-நன்னிலம் பாதையில் உள்ளது, ஸ்ரீவாஞ்சியம் என்ற புண்ணியத்தலம். மாதவனுடன் லட்சுமியை வாஞ்சையுடன் இணையச்செய்ததால் இத்தலத்து இறைவன் வாஞ்சிநாதேஸ்வரர், வாஞ்சிலிங்கேஸ்வரர் என்ற திருநாமங்கள் பெற்றார். இத்தலத்தில் யோக நிலையில் யமதர்மராஜன் இருப்பதால் இங்கு வந்து தரிசனம் செய்பவர்களுக்கு மரணபயமில்லை. இங்கே உட்பிராகாரத்தில் வீற்றிருக்கும் பிள்ளையாருக்கு வெண்ணெய் சாத்தி வழிபாடு செய்கிறார்கள். அனுமனுக்கே உரித்தான இந்த வழிபாட்டினை பிள்ளையாருக்குச் செய்து, வேண்டிய வரங்கள் யாவையும் பெற்று மகிழ்கின்றனர்.