வாரியாரிடம் ஒருவர், திருமண விழாக்களில் தேங்காய் கொடுக்கிறார்களே, அது ஏன்? என்று கேட்டார். உடனே வாரியார், ஆம், அதற்கொரு பொருள் உண்டு. தேங்குதல் என்றால் தங்குதல் என்று அர்த்தம். தேங்காய் என்றால் தங்கியிராதே! வாங்கிக்கொண்டு கிளம்பு! என்று அர்த்தம். அதனால்தான் நிகழ்ச்சிகள் முடிந்து புறப்படும்போது தேங்காய் தருகிறார்கள்! என்று சொன்னார்.