Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ராமாயண கதையில் இல்லாத அணில்! மூன்று வகை நீராடல் !
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
தலையைத் தொட்டு ஆசீர்வதிப்பது ஏன்?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 மார்
2022
11:03


ஸ்ரீராமரை ஏன் ராகவன் ரகு குலதிலகன் என்றும் அவர் தோன்றிய வம்சத்தை ரகுவம்சம் என்றும் ரகுமன்னரை சிறப்பித்துக் குறிப்பிடுகிறோம்? அந்த வம்சத்தில் தோன்றிய திலீபன், அம்சுமான், ஏன் ராஜ்யத்தையே துறந்து தன் முன்னோர்கள் கடைத்தேறவும், இவ்வுலக மக்கள் <உய்விற்காகவும், தன் ஆயுள் முழுவதையும் தவம் செய்வதில் செலவிட்டு, வருங்காலத்தினர்களின் நன்மைக்காக தேவர் உலகிலிருந்து கங்கையையே பூவுலகிற்குக் கொண்டு வந்த பகீரதனுக்குக் கூட அந்த சிறப்பு கொடுக்கப்படவில்லை ஏன்?

அயோத்தியை ரகு மன்னர் ஆட்சி செய்து வரும் பொழுது மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த வரதந்து எனும் பிரும்மச்சாரி, தகுந்த குருவிடம் குருகுல வாசம் செய்து வந்தான். பதினான்கு வருடங்களில் அனைத்தையும்- வேதம், வேதாங்கம், இதர கலைகள் என்று எல்லாவற்றையும் கற்றுத் தேர்ந்தான். படிப்பு முடிந்ததும் இதர மாணவர்கள் போன்று தானும் குருவிற்கு குருதட்சினை தர விரும்புவதாக அவரிடம் சொன்னான். அவன் குடும்ப நிலையை உத்தேசித்து குரு அவனிடமிருந்து குரு தட்சிணை எதுவும் பெற விரும்பவில்லை. நீ எனக்கு இத்தனை வருடங்கள் செய்த பணிவிடைகளிலேயே நான் மிகவும் திருப்தி அடைந்து விட்டேன். இந்த மனநிறைவே போதும். இதற்கு மேலும் நீ எனக்கு எதுவும் தர வேண்டாம் என்று சொல்லி விட்டார். ஆனால் அவனோ விடாமல் மேலும் மேலும் வற்புறுத்தி, குருதட்சிணை கொடுக்கா விட்டால் நான் கற்ற கல்வி எனக்குப் பயன் தராது என்று சொன்னான்.

பொறுமையிழந்த குரு நீ 14 வருடங்கள் என்னிடம் பாடம் படித்ததற்காக 14 கோடி பொன் கொடு என்று சட்டென்று சொல்லி விடுகிறார். மாணவனும் கொஞ்சமும் தாமதிக்காமல் சரியென்று சொல்லி விட்டுக் கிளம்பி விடுகிறான். அவன் நேராகச் சென்ற இடம் ரகு மன்னரின் அரண்மனை. ஆனால் சோதனையாக அந்த நேரத்தில்தான் அரசர் ஒரு குறிப்பிட்ட யாகம் செய்து முடித்திருக்கிறார். அதன் செய்முறை விதிகளின்படி, யாகத்தின் முடிவில் அந்த யாகத்தைச் செய்யும் தம்பதிகள் தாங்கள் உடுத்தியிருக்கும் வஸ்திரம், மனைவியின் திருமாங்கல்யம் தவிர தங்கள் உடமைகள் அனைத்தையும் தானமாக அளித்துவிட வேண்டும். நிலைமையை உணர்ந்ததும் வரதந்து ஏமாற்றம் அடைகிறான். வெளியே காட்டிக் கொள்ளாமல், தன் வருகையின் நோக்கத்தை மன்னரிடம் தெரிவிக்காமலேயே விடை பெறுகிறான். அவன் எதுவும் சொல்லா விட்டாலும் அவன் முகவாட்டத்தை உணர்ந்த மன்னர் விஷயத்தை அவனிடம் கேட்டு அறிகிறார். அரசர் தனக்கு உதவும் நிலையில் இல்லை என்பதை தன் வருத்தத்தின் காரணம் என்று சொல்கிறான்.

ஆனால் தன் உதவி நாடி வருபவர் ஏமாற்றத்துடன் திரும்புவதை மன்னர் விரும்பவில்லை. தன் நண்பனான குபேரனை மனதில் நினைத்து, அவனிடம் தனக்கு 14 கோடி பொன் உடனடியாகக் கொடுத்து அனுப்பும்படி பிரார்த்தனை செய்கிறார். அந்தக் கணமே குபேரன் அவரது பொக்கிஷ அறையில் பொன் மழை பொழியச் செய்கிறான். வரதந்துவின் பொருட்டே தான் குபேரணிடம் பொன் கேட்டதாகச் சொல்லி சேர்ந்திருக்கும் பொன் அனைத்தையும்- நிச்சயமாக 14 கோடிக்குமேல் இருக்கும்- எடுத்துச் செல்லும்படி பணிக்கிறார் அரசர். ஆனால் வரதந்துவோ தன் தேவைக்கு மேல் ஒரு காசு கூட அதிகமாக எடுத்துச் செல்ல மாட்டேன் என்று அடம் பிடிக்க, வாக்குவாத முடிவில் மன்னரே வெற்றி பெறுகிறார். அப்படிப்பட்ட பண்பு முதிர்ந்த மன்னரும், பிரஜைகளும் வசித்த நாடு கோசல நாடு என்று புகழ்கிறார் கவி காளிதாஸர் தன் ரகுவம்சம் காப்பியத்தில். தன் குடிமக்களின் ஒருவனான ஏழை மாணவனின் மனநிறைவிற்கு அந்த அளவு முக்கியத்துவம் கொடுத்த அரசர் ரகுமன்னர்- ரகுவம்சம்-ரகுகுல திலகன்- எப்பேர்ப்பட்ட வம்சம்! கூர்ந்து நோக்கும் பொழுதுதான் தர்மத்தைக் காப்பதுதான் முக்கிய நோக்கம் என்பது புலப்படும். உபரியாகக் கிடைக்கும் நன்மைகளே நல்லோரைப் போற்றுதலும், தீயோரை அழிப்பதும். சர்வ வல்லமை பொருந்திய இறைவனால் நினைத்த மாத்திரத்தில், அரக்கர்களை வதம் செய்ய முடியாதா என்ன? அப்படி ஒன்றும் அது அவருக்குப் பிரமாதமான, கடினமான விஷயமில்லை.

துளசி செடியை நம் இல்லங்களில் வளர்க்கிறோம். அதனை நன்முறையில் செழிப்பாக வளரச் செய்வதுதான் நம் நோக்கம். இதற்காகத்தான் நாம் அதற்கு தினமும் நீர் ஊற்றுகிறோம், பக்கத்தில் வளரும் கிளைகளைப் பிடுங்குகிறோம். துளசி செடிதான் தர்மம் என்றால், நீர் ஊற்றுவதை நல்லவர்களை பரிபாலனம் செய்வதற்கும், களை பிடுங்குவதை தீயவர்களை அழிப்பதற்கும் ஒப்பிடலாம்.

கிராமங்களில் இருக்கும் பூர்வீக வீடுகளை பொருளாதார கண்ணோட்டத்துடன் விற்று விடக் கூடாதாம். ஒரு வீட்டில் புகுந்து 10-15 நிமிடங்கள் பதட்டத்துடன் வேலை செய்து, அகப்பட்டதைத் திருடிச் செல்லும் திருடர்களே தங்களின் ஏதோ சில அதிர்வலைகளை எப்படி வேண்டுமானாலும் அதைப் பெயரிடலாம்- அவ்விடத்தில் விட்டுச் செல்கின்றனர். இந்த அடிப்படையில்தான் பல மணி நேரம் கழித்து வரும் போலீஸ் நாய்கள் உதவுகின்றன. உண்மை இப்படி இருக்கையில் நீண்ட காலம் அவ்வீடுகளில் வசித்து வந்த நம் முன்னோர்கள் அனைவரும் அந்த வீடுகளில் எப்படி வியாபித்து இருப்பர்? எத்தனை பூஜைகள், ஹோமங்கள், காரியங்கள், சுபநிகழ்ச்சிகள்!  அந்த நாட்களில் வீடுகளில்தானே அத்தனை மங்கல நிகழ்ச்சிகளும் நடக்கும். எல்லாமே அதிர்வலைகளாக அங்கு நிறைந்திருக்கும். எவ்வளவு சான்னித்தியம் பெற்று விளங்கும்! இவற்றை மறுபடியும் கொண்டு வர முடியாது. அவைகளின் பழமை- (ஆண்டிக் வேல்யு) கருதியாவது நாம் அதனை நம் கடமையாக நினைத்தாவது பராமரித்து வரவேண்டும் என்று எடுத்துரைத்தார். கிருஷ்ணரின் அவதார நோக்கம் என்று பரவலாகச் சொல்லப்படுவது கம்ஸனை வதம் செய்வது ஆகும். மற்றொரு விளக்கம் பூமாதேவி பூமியின் பாரம் அதிகமாகி வருகிறது தன்னால் சுமக்க முடியவில்லை என்று மஹாவிஷ்ணுவிடம் போய் முறையிடுகிறாள். மஹாபாரதப் போர் நடத்துவதன் மூலம் அது குறைக்கப்படும். கூடிய விரைவில் தான் ஸ்ரீகிருஷ்ண அவதாரம் எடுத்து வரும் போது பூமாதேவி குறை தீர்க்கப்படும் என்று உறுதி கூறுகிறார். ஆனால் மஹாபாரதத்திலேயே இந்த அவதார நோக்கம் பற்றிய பின்வரும் விளக்கம் ராஜமாதா குந்திதேவி கூறுவதாக அமைந்துள்ளது.

ஸ்ரீமஹாவிஷ்ணு கிருஷ்ணராக ஜனனம் எடுத்து, வளர்ந்து வரும்போது பலவித லீலைகளைச் செய்கிறார். அவைகளைப் பற்றி பின்வரும் நாட்களில் பல ஸ்லோகங்கள், பாடல்கள், காவியங்கள் வெளிவரப் போகின்றன. அவைகளைப் படிப்பதன் மூலம், பக்தியுடன் பாராயணம் செய்வதன் மூலம் வருங்கால சந்ததியினர் நலன் பெற்று இறுதியில் நற்கதியும் அடையப் போகின்றனர். யோக க்ஷேமமே அவதார நோக்கம்- இப்படி அத்தையின் விளக்கத்திற்கு மருமகன் புன்முறுவல் பூத்து அப்ரூவல் கொடுக்கிறார். ராமராக பகவான் அவதரித்தபொழுது தம்பி லஷ்மணனாக உடன் வந்த ஆதிசேஷன், கிருஷ்ணாவதாரத்தில் அண்ணனாக, பலராமனாக வரக் காரணம் என்ன? இதற்கும் பலரது விளக்கம் தம்பியிடமிருந்து பல சேவைகளை, கைங்கர்யங்களைப் பெற்ற ராமர், அடுத்த அவதாரத்தில் தான் தம்பியாக வந்து, லக்ஷ்மணனை அண்ணனாக வர வைத்து அவருக்கு சேவைகள் செய்து கணக்கை சரி செய்து கொண்டார் என்பதுதான். ஆனால் உண்மை அதுவல்ல. ஆதிசேஷன் அண்ணனாக வரவேண்டுமென்பது ராமர் எடுத்த முடிவில்லை, லக்ஷ்மணன் எடுத்த முடிவு. எந்தச் சூழ்நிலையில் அப்படி முடிவெடுத்தார்?

கருவுற்றிருந்த சீதை அன்னையை, வண்ணான் கூறிய வார்த்தைகளைக் கேட்க நேர்ந்த ராமர், மனவருத்தம் கொண்டு, காட்டில் கொண்டு விடத் தீர்மானம் செய்யும் இடம். தீர்மானம் எடுத்தாகி விட்டது. எப்பட்டிச் செயல்படுத்துவது? யாரிடம் அந்த வேலையை ஒப்படைப்பது? அவருடைய முதல் தேர்வு பரதன். விஷயம் கேட்டதும் பரதன் பதறிப் போய், ராமர் கோபித்துக் கொண்டாலும் பரவாயில்லை, அவருடைய பாதுகைகளின் துணையுடன் மீதி காலத்தைக் கழித்து விடலாம் என்று முடிவெடுத்து தன்னால் அந்தப் பணியை செய்யமுடியாது என்று மறுத்து விடுகிறான். அடுத்து வரும் சத்ருக்னன் பதிலும் அதேதான் என்ற நிலையில் கடைசியில் லக்ஷ்மணனை அழைக்கிறார். ஆரம்பத்திலேயே அண்ணனாக தான் சொல்வதை அவர் முடிக்க வேண்டும் என்று உறுதிமொழியும் பெற்றுக் கொள்கிறார். லக்ஷ்மணன் பதைபதைக்கிறார். அனலில் போட்ட புழுவாக துடிதுடிக்கிறார். கண்களில் நீர்பெருக, சீதை தன்னிடம் ராமர் எதற்காக இப்படி ஒரு முடிவெடுத்தார் என்று கேட்டால் நான் என்ன பதில் கூறுவேன் என்று தவியாய் தவிக்கிறார். ஆனால் கொடுத்த வாக்கிலிருந்து பின் வாங்க முடியவில்லை. அப்பொழுது மனம் நொந்து ராமரிடம் சொல்கிறார். தம்பி என்று உனக்குப் பின்னால் பிறந்து விட்டதால்தானே நீ இப்போது சொல்வதைச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். இனி வரும் பிறவியில் இந்த நிலை மாற வேண்டும். உனக்குக் கட்டளை இடும் அண்ணனாக நான் பிறக்க, என் வார்த்தைகளுக்குக் கீழ்படிய வேண்டிய நிலையில் தம்பியாக நீ பிறக்க வேண்டும் என்று கோபத்துடன், மனவருத்தத்தில் சொல்கிறார்.

எனவே அடுத்த அவதாரத்தில் அண்ணன் பலராமன் வார்த்தைகளுக்கு எப்பொழுதும் மறுப்பேதும் சொல்லாமல் செய்யும்பொழுது வேறுவிதமாக செய்தாலும்- அப்படியே ஏற்றுக் கொண்டார். ஆண் குழந்தை பிறந்ததும் வீடுகளில் செய்ய வேண்டிய வைதீக காரியங்கள் பல- நீத்தார் கடனாக நாந்தி என்பது அவைகளில் ஒன்று. குழந்தை பிறந்ததும் செய்யாததால்தான் இப்பொழுது பூணுல் நிகழ்ச்சியை ஒட்டி செய்யப்படுகிறது. பூமியில் போட்டால் முளைக்கக் கூடிய பொருளான நெல்லை எத்தனை பேருக்குக் கொடுக்க முடியுமோ அத்தனை பேருக்கு அப்போது கொடுப்பார்கள். இதுபோன்ற மற்றுமொரு சடங்கு- குழந்தையை உச்சி முகர்தல், இதுவும் மிகவும் பொருள் பொதிந்த ஒரு சடங்குதான். தலை உச்சி- ஸஹஸ்ராரம்- என்று சொல்லப்படும் இடம், சக்ரம் மிகவும் வீர்யம் மிகுந்த ஸ்நானம் ஆகும். தம் வாழ்நாளில் மிகவும் உயரிய இறைநிலையை அடைபவர்கள் தலை உச்சியின் மூலம் தம் இறுதி மூச்சை வெளிவிடுவர். கபால மோக்ஷம் பெறும் ஞானிகள் ஸன்யாஸிகள் மக்களின் பூஜைக்கும், ஆராதனைக்கும் உரியவர்கள். அந்த தலை உச்சி மூலமாகத்தான் பெரியவர்கள் ஆசிகள் உள்ளே செல்கின்றன. இதன் காரணமாகத்தான் திருமணங்களில் இதர சுபநிகழ்ச்சிகளில் தம்பதினரையும் மற்ற சம்பந்தப்பட்டவர்களையும் தலையில் அட்சதை போட்டு ஆசீர்வதிக்கிறோம். பெரியவர்கள், தங்களை வணங்குபவர்களை அவர்கள் தலையில் தங்கள் கைகளை வைத்து ஆசி வழங்குவர். 

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
மனநலம், உடல்நலம் சிறக்கும். ஆயுள் அதிகரிக்கும். மரணபயம் ... மேலும்
 
குறைந்தது 9ல் ஆரம்பித்து 11,13, என ஒற்றைப்படையாக இருக்க ... மேலும்
 
ஆசையை குறைக்க வேண்டும் என்பது இதன் ... மேலும்
 
படுக்கும் முன் திருநீறு பூசி சிவன், துர்க்கையை ... மேலும்
 
இருக்க கூடாது. இறப்பு வீட்டில் காரியம் நடக்கும் போது மட்டும் இதை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar