பதிவு செய்த நாள்
12
மார்
2022
01:03
ராமேஸ்வரம் :பாக்ஜலசந்தி கடலில் அமைந்துள்ள இலங்கை கச்சதீவு அந்தோணியார் சர்ச் திருவிழா நேற்று காலை கொடி ஏற்றத்துடன் துவங்கியது.
இவ்விழாவில் பங்கேற்க நேற்று காலை 10:30 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து 3 விசைப்படகு, ஒரு நாட்டு படகில் இரு பெண்கள் உள்ளிட்ட 76 பக்தர்கள் புறப்பட்டு சென்றனர்.அவர்களை ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சிகணேசன், ராமேஸ்வரம் நகராட்சி தலைவர் நாசர்கான், துணை தலைவர் பிச்சை தெட்சிணாமூர்த்தி வழியனுப்பினர். முன்னதாக பக்தர்களிடம் சுங்கத்துறை, மத்திய, மாநில உளவு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் நடுக்கடலில் பக்தர்கள், படகுகளை இந்திய கடற்படை, இந்திய கடலோர காவல் படை, தமிழக மரைன் போலீசார் சோதனை செய்து, பாதுகாப்புடன் இந்திய, இலங்கை எல்லைக்கு அழைத்து சென்றனர். பின் அங்கிருந்து இலங்கை கடற்படையினர் கச்சதீவுக்கு அழைத்து சென்றனர்.