பழநி பங்குனி உத்திர விழா கொடியேற்றத்துடன் கோலாகல துவக்கம்: பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12மார் 2022 04:03
பழநி: பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு பழநி திருஆவினன்குடி கோயிலில் கொடியேற்றம் நடந்தது. கொடியேற்றத்தில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தனர்.
பழநியில் பங்குனி உத்திர திருவிழா, முருகனின் மூன்றாம் படைவீடான வீடான திருஆவினன்குடி கோயிலில் இன்று(மார்ச் 12) காலை 10:47 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. விழாவில் ஆறாம் நாளான மார்ச் 17 அன்று மாலை சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். ஏழாம் நாளான மார்ச் 18 அன்று திருத்தேர் வடம் பிடித்தல் நடைபெற்று, தேரோட்டம் கிரி வீதியில் நடைபெறும். தங்கக் குதிரை, வெள்ளி ஆட்டுக்கிடா, காமதேனு, தங்கமயில், தங்கப் பிடாரி மயில், உட்பட பல்வேறு வாகனங்களில் நாள்தோறும் சுவாமி திருஉலா நடைபெறும். பத்தாம் நாளான மார்ச் 21, அன்று கொடி இறக்குதல் உடன் பங்குனி உத்திர உற்சவம் நிறைவு பெற உள்ளது. பங்குனி உத்தர திருவிழாவை முன்னிட்டு கலைநிகழ்ச்சிகள் அடிவாரம் குடமுழுக்கு அரங்கில் தினந்தோறும் மாலை. நடைபெறும். விழா ஏற்பாடுகளை இணை ஆணையர் நடராஜன் தலைமையில் கோவில் அதிகாரிகள் செய்யவுள்ளனர். மார்ச் 21வரை திருவிழா நடைபெறும்.