ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கரையில் பயன்பாட்டிற்கு வராமல் உடைமாற்றும் அறை சேதமடைந்து கிடக்கிறது.
ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடலில் தினமும் ஏராளமான பக்தர்கள் புனித நீராடுகின்றனர். ஈரத்துணியுடன் இருக்கும் பக்தர்கள் உடைமாற்ற வசதி இல்லாத நிலையில், கடந்த 3 ஆண்டுக்கு முன் மத்திய சுற்றுலா நிதியில் கடற்கரையில் இரு உடை மாற்றும் அறைகள் அமைத்தனர். இந்த அறையை அமாவாசை நாளில் மட்டும் திறந்த நிலையில், பிற நாள்களில் மூடியே கிடந்தது. இதனால் பக்தர்கள் முழுமையான பயன்பாட்டிற்கு வராமல், உடை மாற்றும் அறையை சுற்றி உள்ள இரும்பு தகடுகள் சேதமடைந்து உள்ளதால், பக்தர்கள் பயன்படுத்த முடியாத அவலம் உள்ளது. இதனால் மத்திய அரசுக்கு பல லட்சம் ரூபாய் வீணாகியது.